தனியார் மருந்து தொழிற்சாலையிடம் ரூ.10 லட்சம் லஞ்சம்.. வணிகத்துறை அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த சிபிஐ அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2024, 8:53 pm

தனியார் மருந்து தொழிற்சாலையிடம் ரூ.10 லட்சம் லஞ்சம்.. வணிகத்துறை அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த சிபிஐ அதிகாரிகள்!!

புதுச்சேரியில் இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலையிடம் வணிகத்துறை அதிகாரிகள் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து, 100 அடி சாலையில் உள்ள வணிக வரி வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த அலுவலகத்தில் ஜெயபாரதி என்பவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இன்று காலை முதல் வணிக வரி ஆணையர் முருகானந்தம், ஆனந்தன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பின்னர் கைது செய்தனர்.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்ட புகாரில் வருமான வரி ஆலோசகர் சித்ரா, துணை ஆணையர்கள் ஆனந்தன், முருகானந்தம் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!