திருப்பதி : தாயின் மரணத்தைத் அறியாமல் நான்கு நாட்கள் அவருடைய உடலுடன் வீட்டிலேயே தங்கி இருந்த 10 வயது மகனின் செயல் கண்ணீரை வரவழைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் ராஜலட்சுமி கணவரை பிரிந்து தன்னுடைய பத்து வயது மகன் சியாம் கிஷோருடன் திருப்பதியில் உள்ள வித்யா நகர் காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி கீழே விழுந்த ராஜலட்சுமி தலையில் அடிபட்டு அவர் அங்கேயே மரணமடைந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவருடைய 10 வயது மகன் ஷியாம் கிஷோர் தன்னுடைய தாய் தூங்குவதாக நினைத்து அவருடைய உடலுக்கு அருகிலேயே படுத்து வழக்கம்போல் தூங்கினார்.
மேலும் கடந்த 4 நாட்களாக தன்னுடைய தாய் தூங்குவதாக நினைத்து வீட்டிலிருந்த பொருட்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.
மேலும் வழக்கம்போல் பள்ளிக்கும் சென்று வந்தான். இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து நாற்றம் அடித்த காரணத்தால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்து வீட்டார் இதுபற்றி ராஜலட்சுமியின் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.
அவர்கள் வந்து பார்த்த போது ராஜலட்சுமி இறந்து போனது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இந்நிலையில் பத்து வயது கிஷோர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட மாணவன் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் காரணமாக திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
சென்னையில், இன்று (பிப்.25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 75 ரூபாய்க்கு…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர்…
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
This website uses cookies.