வாட்ஸ் அப்பில் வெளியான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் : விசாரணையில் சிக்கிய பள்ளி முதல்வர்… அதிரடி ஆக்ஷன்!!
Author: Udayachandran RadhaKrishnan30 April 2022, 10:39 am
ஆந்திரா : 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பிரபல தனியார் பள்ளி முதல்வர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் நேற்று ராயலசீமா ரேஞ்ச் டிஐஜி செந்தில்குமார் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, கடந்த 27 ம் தேதி ஆந்திர மாநிலத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது .
முதல் நாளான 27ம் தேதி தெலுங்கு பாடத்திற்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. அன்று காலை 9.30 மணிக்கு தேர்வு எழுத மாணவ – மாணவிகளை அதிகாரிகள் தேர்வு அறைக்கு அனுப்பி வைத்தனர். 9.45 மணிக்கு தெலுங்கு வினாத்தாள் வாட்ஸ்அப்பில் வெளியானது .
இது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சித்தூர் மாவட்ட கல்வி அதிகாரி புருஷோத்தம் சித்தூர் முதலாவது காவல் நிலையத் தில் புகார் தெரிவித்தார்.
புகாரின்பேரில் முதலாவது காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நரசிம்மா ராஜு மற்றும் குற்றவியல் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் குற்ற வாளிகளை பிடிக்க தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வந்தனர் .
விசாரணையில் , திருப்பதியில் பிரபல தனியார் பள்ளி முதல்வர் தெலுங்கு பாடத்தில் மாணவ – மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என கருதி வாட்ஸ்அப்பில் கேள்வித்தாளை அனுப்பியது தெரிந்தது.
இவருக்கு 6 பேர் உடந்தையாக செயல்பட் டுள்ளனர் .இதையடுத்து முதல்வர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1) ப.சுரேஷ் , முதல்வர் சைதன்யா பள்ளி சந்திரகிரி
2 ) கே.சுதாகர் என் ஆர் ஐ அகாடமி திருப்பதி .
3 ) ஆரிப் , முதல்வர் , சைதன்யா பள்ளி திருப்பதி .
4 ) என். கிரிதர் ரெட்டி , துணை முதல்வர் நாராயணபள்ளி , திருப்பதி .
5 ) கே.மோகன் சைதன்யா பள்ளி , திருப்பதி .
6 ) பவன்குமார்ரெட்டி நெல்லூர் மண்டலம் .
7)பி.சோமு , நெல்லூர் 7 பேரை கைது செய்துள்ளனர். இவர்களுக்கு மேலும் யார் , யார் உடந்தையாக செயல்பட்டார்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.