கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுருண்டு விழுந்து உயிரிழப்பு ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
6 May 2024, 5:27 pm

மகாராஷ்டிராவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 2ம் தேதி இரவு புனேவில்11 வயது சிறுவன் காண்ட்வே லோஹேகானில் உள்ள ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, பந்து வீசிக் கொண்டிருந்த அந்த சிறுவன் வீசிய பந்தை, பேட்டிங் செய்து கொண்டிருந்தவர் ஓங்கி அடித்துள்ளார்.

மேலும் படிக்க: அதிமுகவைப் போல காங்கிரசையும் யாராலும் அழிக்க முடியாது… அதிமுக எங்களின் எதிரி கட்சி அல்ல ; காங்., எம்பி திருநாவுக்கரசர் !!

இதில் வேகமாக வந்த பந்து, அந்த சிறுவனின் உயிர்நாடியில் பட்டுள்ளது. இதனால் நிலை குலைந்து போன அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த மருத்துவர்களும் அதனையே தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சிறுவன் உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 295

    0

    0