அசாம் எல்லையில் 1,183 கிலோ கஞ்சா பறிமுதல்: போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை..!!

Author: Rajesh
17 May 2022, 2:40 pm

கவுகாத்தி: அசாமில் எல்லைப்பகுதியில் கடத்தப்பட்டு கொண்டு வரப்பட்ட 1,183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

திரிபுராவின் அகர்தலா நகரில் இருந்து லாரி ஒன்று அசாமின் கவுகாத்தி நகர் நோக்கி சென்றுள்ளது. அசாம் மற்றும் திரிபுரா எல்லையருகே வந்த அந்த லாரியை கரீம்நகர் மாவட்ட பகுதியில் வைத்து அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நேற்றிரவு 11 மணியளவில் சோதனை செய்துள்ளனர்.

இந்த சோதனையில், அந்த வாகனத்தில் 1,183 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு கடத்தப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து லாரியில் இருந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் லாரி ஓட்டுனர் ஆவார்.

அவர்கள் வசீம் மற்றும் வாசிம் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்! 
  • Close menu