பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை… பலமுறை எச்சரிக்கை விடுத்தும் விடாத இளைஞன்… இறுதியில் நடந்த விபரீதம்..!!

Author: Babu Lakshmanan
26 July 2022, 2:27 pm

தன்னை பின்தொடர்ந்து வந்த இளைஞன் கொடுத்த தொந்தரவினால் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் – பிலிபிட் மாவட்டம் சங்ஹர்ஹி அருகே உள்ள சண்டெ கிராமத்தை சேர்ந்தவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பயின்று வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞன், அந்த மாணவியை பல நாட்களாக பின்தொடர்ந்து வந்துள்ளான்.

தன்னை பின்தொடர வேண்டாம் என்று மாணவி பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அந்த இளைஞன் விட்டபாடில்லை. இதனால், தனது பெற்றோர் மூலம் அந்த இளைஞனை மாணவி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், தொடர்ந்து பின் தொடர்ந்து வந்து அந்த இளைஞன் தொல்லை கொடுத்துள்ளான்.

இந்நிலையில், சஞ்சய் பின் தொடர்வதால் பல நாட்களாக மன உளைச்சலில் இருந்த பள்ளி மாணவி நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெற்றோர், உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ