பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வீடு வீடாகச் சென்று உதவி கேட்டும், பொதுமக்கள் யாரும் உதவ முன்வராத சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உஜ்ஜைன் நகரத்தில் உள்ள பத்நகர் சாலையில் ஆசிரமம் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஆசிரமத்தின் வெளியே 12 வயது சிறுமி ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் ரத்தத்துடன், வீடு வீடாக சென்று உதவி கேட்டுள்ளார். ஆனால், யாரும் உதவ முன்வராத நிலையில், அந்த சிறுமி திகைத்து போய் காணப்பட்டார்.
இந்த சூழல், ஆசிரமத்தின் சாமியார் ராகுல் சர்மா என்பவர் கவனித்து உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார். அதன்பின்பு, போலீசார் விரைந்து வந்து, சிறுமியை அழைத்து சென்றனர். இதுபற்றி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து ஆசிரம சாமியார் கூறியதாவது :- ஆசிரமத்தில் இருந்து வேலையாக புறப்பட்டு செல்லும் போது, சிறுமி ரத்தத்துடன், அரை நிர்வாண கோலத்தில் ஆசிரம வாயிலில் கிடந்தார். அவருக்கு தனது ஆடைகளை கொடுத்து உதவினேன். பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். மஹாகால் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டேன். அவர்களிடம் நிலைமை பற்றி விளக்கி கூறினேன். அவர்கள் 20 நிமிடங்களில் ஆசிரமத்திற்கு வந்து சிறுமியை மீட்டுச் சென்றனர், என கூறியுள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் ஆய்வு செய்த போது, அந்த சிறுமி காயமடைந்தபடி, அரை நிர்வாண கோலத்தில் வீடு, வீடாக சென்று உதவி கேட்கும் காட்சி இருந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், நெட்டிசன்கள் கொந்தளித்து கருத்துக்களை கூறி வருகின்றனர்.
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
This website uses cookies.