300 அடி பள்ளத்தில் விழுந்த 19 வயது இளைஞர் : மலையேற்ற பயிற்சியில் விபரீதம்.. ஹெலிகாப்டர் உதவியுடன் இந்திய விமானப்படை மீட்ட காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan21 February 2022, 8:53 am
கர்நாடகா : 300 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை இந்திய விமானப்படையின்ர் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
கர்நாடகாக சிக்கபல்லப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலைக்கு வார இறுதி நாட்களை கழிக்க பெங்களூர் பிஎஸ் பல்கலைக்கழகத்தல் முதலாமாண்டு பொறியியல் படிக்கும் நீஷக் ஷர்மா என்ற மாணவர் மலையேற்றதிற்கு சென்றுள்ளார்.
மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவர் தனது செல்போனில் இருந்து உள்ளூர் போலீசாருக்கும், டெல்லியில் உள்ள தனது பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
உள்ளூர் போலீசாரால் 30 அடி பள்ளத்திற்கு கீழ் செல்ல முடியாததால் இந்திய விமானப்படையின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் விமானப்படை வீரர் நிஷாக் ஷர்மாவை மீட்டனர்.
5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளைஞர் மீட்கப்பட்டார். முதுகில் பலத்த காயமடைந்த நிலையில் நிஷாக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மலையில் ட்ரக்கிங் சென்ற பாபு என்ற இளைஞரை இந்திய ராணுவத்தினர் மீட்டது குறிப்பிடத்தக்கது.