மும்பை: தானே – திவா இடையே அமைக்கப்பட்டுள்ள 2 புதிய ரயில் பாதைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
மத்திய ரயில்வே வழித்தடத்தில் கல்யாண் முக்கியமான சந்திப்பு ரயில் நிலையமாக உள்ளது. இதில் கல்யாண் – சி.எஸ்.எம்.டி. இடையே 4 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதையில் ஸ்லோ மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மற்ற 2 பாதையில் விரைவு மின்சார ரயில்களுடன், எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரயில், நீண்ட தூர ரயில்களால் மின்சார ரயில்களை தாமதமாக இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இதை தடுக்கும் வகையில் தானே – திவா இடையே ரூ.620 கோடி செலவில் கூடுதலாக 2 வழிப்பாதைகள் அமைக்கும் பணி முடிந்துள்ளது.
இந்த திட்டத்தில் 1.4 கி.மீ. நீள ரயில்வே மேம்பாலம், 3 பெரிய பாலங்கள், 21 சிறிய பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரயில் பாதைகளை இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். மாலை 4.30 மணிக்கு தொடங்கும் விழாவில் மோடி 2 மின்சார ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
This website uses cookies.