விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி 2 விமானிகள் பலி : தெலுங்கானாவில் துயரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2023, 2:37 pm

விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி 2 விமானிகள் பலி : தெலுங்கானாவில் துயரம்!!

தெலுங்கானா மாநிலம் துண்டிக்கல் பகுதியில் இந்தியா விமானப் படை பயிற்சி அகாடமி உள்ளது. இந்த மையத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக Pilatus PC 7 Mk Il என்ற பயிற்சி விமானத்தில் ஹைதராபாத் அருகே விமானிகள் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிமான விமானம் வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமானப் படை தெரிவித்துள்ளது. தெலுங்கானா விமானப் படை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி 2 விமானிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 475

    0

    0