தினமும் குளிக்க 25 லிட்டர் பால்… படுக்க ரோஜா மெத்தை : பரபரப்பை கிளப்பிய பாஜக எம்பி!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 April 2023, 1:25 pm

தினமும் குளிக்க 25 லிட்டர் பால்… படுக்க ரோஜா மெத்தை : பரபரப்பை கிளப்பிய பாஜக எம்பி!!!

பிரபல நடிகை ஒருவர் தன்னை டார்ச்சர் செய்ததாக பாஜக எம்பியும் பிரபல நடிகருமான ரவி கிஷன் அண்மையில் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் தற்போது இன்னொரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். அதில், அனுராக் காஷ்யப்பின் Gangs of Wasseypur படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என் திமிர் காரணமாக வாய்ப்பை இழந்ததாக கூறினார்.

பேட்டியின் போது, அந்த ப்டத்தின் படத்தின் படப்பிடிப்பின் போது குளிப்பதற்கு பாலும், தூங்குவதற்கு ரோஜா மெத்தையும் கேட்டதாக சிரித்துக்கொண்டே ஒப்புக்கொண்டார்.
பாலில் குளித்து, ரோஜா இதழ்களில் தூங்குவது வழக்கம். நான் என்னை ஒரு பெரிய நட்சத்திரமாக எண்ணிக்கொண்டேன். பாலில் குளித்தால் மக்கள் இதைப் பற்றி பேசுவார்கள் என்று நினைத்தேன்.

தினமும் 25 லிட்டர் பால் தயார் செய்ய முடியாததால் அவர்கள் என்னை அந்த படத்தில் சேர்க்கவில்லை. இந்தக் கோரிக்கைகள் ஒன்றுமில்லாமல் திடீரென்று பணமும் புகழும் கிடைத்தால் மனம் தளர்ந்து போகிறது என கூறியுள்ளார்.

  • Vidaamuyarchi AK Trisha Arjun regina salary விடாமுயற்சி படத்தில் அஜித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரெஜினாக்கு டிமாண்ட்!