296 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி : சாதாரணமான சாலை இல்ல.. ஆச்சரியப்பட வைக்கும் 5 முக்கிய தகவல்கள்!!

உத்தரபிரதேசத்தில் 296 கிலோமீட்டர் நீளமுள்ள புந்தேல்கண்ட் நான்குவழி விரைவுச்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை ஜலானில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இந்த திட்டம் நான்கு வழிச்சாலை திட்டம் ரூ.14,850 கோடி மதிப்பில் 296 கிலோமீட்டர் தூரத்துக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 28 மாதங்களில் விரைவுச்சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பிரபலமான ஆக்ரா – லக்னோ விரைவுச்சாலையுடன் இணையும் வகையில் புந்தேல்கண்ட் விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட், பந்தா, மகோபா, ஹமிர்பூர், ஜலான், அவுரையா, எட்டாயா மாவட்டம் வழியே சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை எதிர்காலத்தில் 6 வழி சாலையாக மாற்றும் வகையில் பந்தேல்கண்ட் விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், 296 கிமீ நீளமுள்ள புந்தேல்கண்ட் விரைவுச் சாலை திறக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது. இது பந்தேல்கண்ட் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும். இந்த விரைவுச் சாலை 7 மாவட்டங்கள் வழியாகச் சென்று ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையுடன் இணைக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்று விரைவுச்சாலையை திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, இந்த அதிவேக நெடுஞ்சாலையானது தடையற்ற இணைப்பு மற்றும் மாநிலத்தில் மேலும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும். இந்த அதிவேக நெடுஞ்சாலையால், இப்பகுதியில் தொழில் வளர்ச்சி ஏற்படும். இது மோடி மற்றும் யோகி அரசு, நாங்கள் நகரங்களுக்கு மட்டுமல்ல, கிராமங்களுக்கும் வளர்ச்சியை கொண்டு செல்வோம்.

இரண்டு விஷயங்கள் – சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மற்றும் இணைப்பு ஆகியவை சரி செய்யப்பட வேண்டும் என்றால், இது எல்லா முரண்பாடுகளையும் எதிர்த்துப் போராடக்கூடிய ஒரு மாநிலமாக மாறும் என்று எனக்குத் தெரியும். இரண்டையும் மேம்படுத்தினோம், சட்டம்-ஒழுங்கு நிலை மேம்பட்டு வருகிறது, இணைப்பு வசதியும் மேம்படும்.

டெல்லி-மீரட் விரைவுச் சாலையின் அடிக்கல் நாட்டி, எங்களால் திறந்து வைக்கப்பட்டது. புந்தேல்கண்ட் விரைவுச்சாலையிலும் இதேதான் நடந்தது. இது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திறக்கப்பட இருந்தது, ஆனால் நாங்கள் எங்கள் காலக்கெடுவை எட்டியது மட்டுமல்லாமல் அதைக் கடந்தோம் என்றும் கூறினார்.

மேலும், புந்தேல்கண்ட் எண்ணற்ற வீரர்களை உருவாக்கிய பூமி, இந்த நிலத்திற்கு அதிவேக நெடுஞ்சாலையை பரிசாக வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொழில்துறையில் முன்னேற்றம் அடைய இந்த சாலை பேருதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த விரைவுச் சாலையில் 5 முக்கய அம்சங்கள் பின்வருமாறு

இந்த விரைவுச்சாலை பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 14,850 கோடி ரூபாய் செலவில் 296 கிமீக்கு நான்கு வழி விரைவுச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி 29 அன்று பிரதமரால் இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் 28 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளன.

உத்தரபிரதேச விரைவுச்சாலைகள் தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவில் இந்த விரைவுச்சாலை கட்டப்பட்டது. பின்னர் ஆறு வழிச்சாலையாக விரிவாக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்துவதுடன், அதிவேக நெடுஞ்சாலையானது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்க உள்ளது.

விரைவுச்சாலைக்கு அடுத்தபடியாக பண்டா மற்றும் ஜலான் மாவட்டங்களில் தொழில்துறை வழித்தடத்தை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…

10 minutes ago

எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…

வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…

44 minutes ago

விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…

1 hour ago

GBU படத்தால தூங்க கூட முடியல- பேட்டியில் வெளிப்படையாக புலம்பிய Darkkey

மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…

2 hours ago

GBU படம் பார்க்க மகளுடன் வந்த ஷாலினி.. வீடியோ வைரல்!

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…

2 hours ago

காதலனை திருமணம் செய்த மகள் கௌரவக் கொலை.. 6 மாத கருவை கலைத்து, சிறையில் தள்ளிய பெற்றோர்!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…

2 hours ago

This website uses cookies.