கோவா கடலில் விழுந்து நொறுங்கிய 29K போர் விமானம் : பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்து… விமானிக்கு என்னாச்சு?

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2022, 1:51 pm

கோவா கடற்கரை அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 29கே போர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

கோவா கடலோரப்பகுதியில் இன்று இந்திய கப்பல்படையின் மிக் 29கே ரக போர் விமானம் வழக்கமான பயிற்சி பயணத்தை மேற்கொண்டது.

பயிற்சியை முடித்துக்கொண்டு தளத்திற்குத் திரும்பும்போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் குறித்து உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படை விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து விமானியை பாதுகாப்பாக மீட்டனர்.

விமானியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து இந்திய கடற்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்