தனியார் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த 3 மாணவிகள், 2 மாணவர்கள் மாயம் : பெற்றோர்கள் புகார்… காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2022, 2:12 pm

திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் என 5 பேர் மாயமாகியுள்ள நிலையில் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதியில் உள்ள அன்னமய்யா தனியார் கான்வென்ட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் குணஸ்ரீ, மெகதாஜ், மௌன ஸ்ரீ ஆகிய மாணவிகளும், அதே வகுப்பில் படிக்கும் அப்துல் ரகுமான் மற்றும் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் உசேன் ஆகிய மாணவர்களை இன்று காலை முதல் காணவில்லை.

பள்ளியில் தற்போது மாதாந்திர பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 6 மணிக்கு துவங்கி பள்ளியில் பரீட்சை நடைபெற்றது.

எட்டு மணி அளவில் பரீட்சையை எழுதி முடித்து விட்டோம். சென்று சாப்பிட்டு வருகிறோம் என்று கூறி ஐந்து பேரும் புறப்பட்டு சென்றனர்.

ஆனால் அதன் பின்னர் அவர்கள் பள்ளிக்கு திரும்பவில்லை. இது பற்றி பள்ளி நிர்வாகம் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு போன் செய்து கேட்டபோது அவர்கள் வீட்டுக்கு வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

https://vimeo.com/768890841

இந்த சம்பவம் பற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்துள்ள திருப்பதி போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி மாயமான மாணவ, மாணவிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 617

    0

    0