இந்திய மாணவர்கள் 3 பேர் பலி.. அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் சோகம்..!!
Author: Udayachandran RadhaKrishnan21 May 2024, 8:34 pm
இந்திய மாணவர்கள் 3 பேர் பலி.. அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் சோகம்..!!
அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் படித்த 5 இந்திய மாணவர்கள் சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: வாங்கிய வாழைப் பழத்துக்கு பணம் கேட்ட வியாபாரிக்கு கத்தரிக்கோலால் குத்து : வடமாநில வாலிபரை வதக்கி எடுத்த மக்கள்!
விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கார் விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.