ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்ம மரணம் : குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2024, 11:25 am

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சனத் நகரில் இருக்கும் ஜெக் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிளாட் ஒன்றில் வெங்கடேஷ் மாதவி தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்தனர்.

மனநிலை பாதிக்கப்பட்ட அவர்களது 25 வயது மகன் ஹரியும் அவர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மூன்று பேரும் நேற்று மாலை வீட்டின் குளியல் அறையில் இறந்து போய் சடலமாக கிடந்தனர்.

இது பற்றி வீட்டின் பணிப்பெண் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் மூன்று பேரில் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

மூன்று பேரும் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்திருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் மின்சாரம் தாக்கியதற்கான அடையாளங்கள் ஏதுமில்லை.

எனவே போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 213

    0

    0