கொரோனாவை போல் பரவுகிறதா குரங்கு அம்மை? வெளிநாடு செல்லாத 31 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை உறுதியானதால் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2022, 12:30 pm

டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்ட 31 வயதான நபர் சமீபத்தில் வெளிநாடு சென்ற பயண வரலாறு இல்லை என்றும் தொற்று பாதித்த நபர் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கேரளாவில் 3 பேருக்கு குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 687

    0

    0