ஆசிரியர் அடிப்பதாக காவல்நிலையத்தில் புகார் கூறிய 3ம் வகுப்பு மாணவன் : வைரலாகும் க்யூட் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2022, 3:40 pm

தெலுங்கானா : தன்னை ஆசிரியர்கள் அடிப்பதாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் கூறிய மூன்றாம் வகுப்பு மாணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மகபூப்பா நகர் மாவட்டத்திலுள்ள பையாரம் நகர காவல் நிலையத்திற்கு நேற்று அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவன் அணில் என்பவர் வந்தார்.

முக கவசம் அணிந்து கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து காவல் நிலையத்திற்கு வந்த அந்த சிறுவனை பார்த்த போலீசார் காவல்நிலையத்திற்கு வந்து இருப்பதற்கான காரணம் பற்றி கேட்டனர்.

அப்போது தன்னுடைய ஆசிரியர்களான சன்னி, வெங்கட் ஆகியோர் தன்னை அடிப்பதாக அவன் போலீசாரிடம் கூறினான். முக கவசம் அணிந்து காவல் நிலையத்திற்கு வந்ததுடன் தயக்கமில்லாமல் ஆசிரியர் அடிப்பதாக அணில் கூறிய குற்றச்சாட்டுகளை கேட்ட போலீசார் அவனை அழைத்து கொண்டு பள்ளிக்கு சென்றனர்.

அங்கு தன்னை அடித்த ஆசிரியர்கள் இரண்டு பேரையும் அந்த மாணவன் அடையாளம் காட்டினான். மாணவனை அடித்த ஆசிரியர்கள் இரண்டு பேருக்கும், மாணவர்களை அடித்து துன்புறுத்த கூடாது என்று அறிவுரை கூறியதுடன் அந்த மாணவனுக்கும் அறிவுரை கூறிய போலீசார் அங்கிருந்து சென்றனர்.

பிஞ்சு மாணவன் ஆசிரியர் அடிப்பதாக கூறி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சம்பவம் குழந்தையின் புத்திசாலித்தனத்தை பாராட்ட வைத்துள்ளது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 1619

    0

    0