93 தொகுதிகளில் தொடங்கியது 3ஆம் கட்ட வாக்குப்பதிவு.. வாக்களித்தார் பிரதமர் மோடி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2024, 8:48 am

93 தொகுதிகளில் தொடங்கியது 3ஆம் கட்ட வாக்குப்பதிவு.. வாக்களித்தார் பிரதமர் மோடி!!

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கடந்த மாதம் 19-ந்தேதி மற்றும் 26-ந்தேதிகளில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

இதையடுத்து, உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவை, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

வாக்களிக்க வந்த பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார். முன்னதாக, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு, இன்றைய தேர்தலில் வாக்களிக்கும் அனைவரும் தங்களது வாக்குரிமையை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் படிக்க: சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து சென்ற போது விபத்து நடந்தது எப்படி? வெளியான ஷாக் சிசிடிவி காட்சி!

வாக்காளர்களின் தீவிர பங்கேற்பு நிச்சயமாக தேர்தலை விறுவிறுப்பாக மாற்றும் என எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டு இருந்தார்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 271

    0

    0