ஒரே நேரத்தில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 4 யானைகள் உயிரிழப்பு… ஷாக் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2023, 2:29 pm

ஒரே நேரத்தில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 4 யானைகள் உயிரிழப்பு… ஷாக் சம்பவம்!!

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன.
அந்த யானைகள் உணவு, குடிதண்ணீர் ஆகியவற்றிற்காக அடிக்கடி அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று இரவு ஆறு யானைகள் கொண்ட கும்பல் ஒன்று பார்வதிபுரம் அருகே உள்ள விளைநிலத்தில் புகுந்தது. அப்போது அங்கு மிகவும் தாழ்வாக இருக்கும் டிரான்ஸ்பார்மர் ஒன்றின் மின் கம்பி மீது யானைகள் உரசி சென்றபோது மின்சாரம் பாய்ந்து நான்கு யானைகள் பரிதாபமாக மரணம் அடைந்து விட்டன.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்துகின்றனர். ஒரே நேரத்தில் 4 யானைகள் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் விலங்கிய நல ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!