பாஜக ஆட்சி அமைந்ததும் தெலுங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு 4% இடஒதுக்கீடு ரத்து : மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan20 நவம்பர் 2023, 7:34 மணி
பாஜக ஆட்சி அமைந்ததும் தெலுங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு 4% இடஒதுக்கீடு ரத்து : மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!!!
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 29 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால், தெலுங்கானாவில் தேர்தல் களம் உச்சக்கட்ட அனல் பறக்க தொடங்கி விட்டது. தெலுங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது.
கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. ஆனால், இந்த முறை பாரதிய ராஷ்டிர சமிதி – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது.
மறுபக்கம் பாஜகவும் தேர்தல் களத்தில் உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. வரும் நவம்பர் 29 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, இன்று தெலுங்கானாவில் உள்ள ஜக்டியல் நகரில் தேர்தல் பிரசாரம் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், ஓவைசிக்கு பயந்து ஐதராபாத் மீட்பு நாளை கொண்டாட சந்திரசேகர் ராவ் அச்சப்படுகிறார். ஆனால், நாங்கள் ஓவைசிக்கு அச்சப்பட்வில்லை. நாங்கள் ஐதராபாத் மீட்பு நாளை மாநில நாளாக கொண்டாடுகிறோம்.
ஓவைசி திருப்தி படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கேசிஆர் கட்சியின் சின்னம் கார் ஆகும். ஆனால் அவர்களிடம் கட்சியின் ஸ்டீரிங் (கட்டுப்பாடு) இல்லை. பாஜக ஆட்சி அமைத்தால் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அதை எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கு வழங்குவோம என்றார். பாஜக தனது தேர்தல் அறிக்கையிலும் இதை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0