தாடியை ஷேவ் செய்த 4 மாணவர்கள் சஸ்பெண்ட் ; கல்வி நிறுவனத்தின் நடவடிக்கையால் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
21 February 2023, 6:17 pm

தாடியை ஷேவ் செய்த 4 மாணவர்களை கல்வி நிறுவன நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் – ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தலோல் உலோம் டியொபெண்ட் என்ற இந்த கல்வி நிறுவனத்தில் இஸ்லாமிய மதம் சார்ந்த கல்வியை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மத கல்லூரியில் தாடியை ஷேவ் செய்யக் கூடாது என்ற விதி இருந்து வருகிறது. அப்படியிருந்தும், தாடியை ஷேவ் செய்த 4 மாணவர்களை கல்வி நிறுவன நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாணவர்கள் தாடியை ஷேவ் செய்யக்கூடாது என்றும், தாடியை வெட்டுவது இஸ்லாமிய மதத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • vaadivaasal movie shooting starts on august ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?