கோவிலில் பக்தர்கள் கூடியிருந்த போது துண்டாகி விழுந்த 40 டன் எடை கொண்ட கொடி மரம் : பதற வைத்த காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 February 2022, 10:40 am

ஆந்திரா : குண்டூர் அருகே 60 அடி உயர கால் கொடிமரத்தை நிலை நிறுத்த முயன்றபோது உடைந்து விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பண்டி திவாரிபாலம் கிராமத்தில் பழமையான கோதண்ட ராம கோயில் உள்ளது. அந்த கோயிலில் கடந்த ஓராண்டு காலமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இன்று பழுதடைந்த பழைய கொடி மரத்தை அகற்றிவிட்டு மாலை 60 அடி உயர ஒரே கல்லால் ஆன புதிய கொடிமரத்தை இரண்டு ராட்சத கிரேன்கள் உதவியுடன் நிலைநிறுத்தும் பணி நடைபெற்றது.

அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் ஒன்றின் கம்பி வடம் திடீரென்று அறுந்ததால் கொடிமரம் துண்டாக உடைந்து கீழே விழுந்தது. அதனை பார்த்த அங்கிருந்து தொழிலாளர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்து தாவிக்குதித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலையில் கொடிமரத்தின் உடைந்த பாகம் கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 1572

    0

    0