பாஜக வைத்த 400 இலக்கு.. GOOD JOKE : அப்போ 300? காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆரூடம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2024, 4:18 pm

பாஜக வைத்த 400 இலக்கு..GOOD JOKE : அப்போ 300? காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆரூடம்!

நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்னர் இருந்தே பாஜக தலைவர்கள் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெல்லும் மீணடும் மோடியே பிரதமர் ஆவார் என கூறி வருகின்றனர்.

இது பற்றி காங்., எம்பி சசி தரூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க சொல்லும் 400 இலக்கு என்பது ஜோக். 300 என்பது சாத்தியமற்றது. 200 என்பது கூட அந்த கட்சிக்கு சவாலானதாக இருக்கும். கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடைக்காது.

தெற்கில் 2019-ஐ விட மிகவும் மோசமான முடிவுதான் பா.ஜ.கவுக்கு கிடைக்கும். கடந்த மாதம் 26-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என கூறினார்.

மேலும் படிக்க: கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர கண்காணிப்பு : பயணிகள் SHOCK!

திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர் வெற்றி பெற்றால், இந்த தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும், நீண்ட காலம் இந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் என்ற பெருமையையும் பெறுவார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!