5 எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா : சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் மேகாலயா அரசியலில் திடீர் திருப்பம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2023, 10:02 pm

மேகாலயா அரசியலில் திடீர் திருப்பமாக அம்மாநில எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சி – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இந்நிலையில் இம்மாநிலத்தில் கிம்பா எஸ் மார்பானியாங், எஸ்.ஜி., எஸ்மதுர் மோமினின், ஹேம்லெட்சன் டோஹ்லிங், ஜேசன் சாக்மி மாவ்லாங் மற்றும் சாம்லின் மல்ங்கியாங் என பல்வேறு கட்சிகளை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் இன்று தங்களது பதவியை திடீரென ராஜினாமா செய்தனர்.

இம்மாநிலத்திற்கு இந்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 454

    0

    0