ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு 5 ரூபாய் சோப் : பிளிப்கார்ட் தந்த அதிர்ச்சி பார்சல்… வாடிக்கையாளர் எடுத்த அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2022, 6:44 pm

தெலுங்கானா : பிரபல e-commerce நிறுவனத்தில் ரூ 6000 மதிப்புள்ள செல்போன் ஆர்டர் செய்தவருக்கு ரூ 5 மதிப்புள்ள ரின் சோப் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் வுட்நூர் பகுதியை சேர்ந்த தீமண்ணா என்பவர் பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் செல்போன் வாங்க முடிவு செய்து ரூ 6100 பணம் செலுத்தி அந்த நிறுவனத்தின் வெப்சைட் மூலம் செல்போன் ஆர்டர் செய்தார்.

நேற்று அவருக்கு பிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து செல்போன் வந்திருப்பதாக கூறி ஒரு பார்சல் டெலிவரி செய்யப்பட்டது. அதனை திறந்து பார்த்தபோது அதற்குள் செல்போனுக்கு பதிலாக
ரூ.5 மதிப்புள்ள ரின் சோப் இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க தான் முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். சமீப காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மூலம் ஏராளமான அளவில் நடத்தப்பட்டுள்ளன.

எனவே அவற்றை கருத்தில் கொண்டு தனக்கு வந்த பார்சலை பிரிக்கும் போது அதனை வீடியோ எடுத்தவாறு தீமன்னா பிரித்தார். எனவே அதன் மூலம் அவருக்கு செல்போனுக்கு பதிலாக சோப் வந்திருப்பதை நிறுவனத்திடம் உறுதிப்படுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 882

    1

    0