5 மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் நிலையில், சாலை மற்றும் வாகன பேரணி நடத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநில தேர்தலையொட்டி சட்டசபை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உத்தரகாண்டில் 70 சட்டசபை தொகுதிகளுக்கும் , கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்.14ஆம் தேதியும், பஞ்சாப்பில் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்.20-ஆம் தேதியும், மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு பி.27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கிடையில் கொரோனாவின் பரவல் காரணமாக தேர்தல் ஆணையம் பேரணிகள் மற்றும் பிரச்சாரத்திற்கு ஜனவரி 31 வரை தடை விதித்த நிலையில், பிப்ரவரி 11 வரை கட்டுப்பாடுகள் நீட்டித்தது.
இந்த நிலையில், 5 மாநில தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் நிலையில், சாலை மற்றும் வாகன பேரணி நடத்த தடை நீட்டிக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பரப்புரை செய்வதற்கான தடையும் நீடிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி மைதானத்தில் 30% பார்வையாளர்களுடன் கூட்டங்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.