5 மாநில தேர்தல்… மும்முரம் காட்டிய பாஜக : வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. ஷாக்கில் காங்கிரஸ்!!!
Author: Udayachandran RadhaKrishnan10 October 2023, 9:48 am
5 மாநில தேர்தல்… மும்முரம் காட்டிய பாஜக : வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. ஷாக்கில் காங்கிரஸ்!!!
ஐந்து மாநில தேர்தல் வர உள்ளதால் காங்கிரஸ், பாஜக மற்றும் மாநில கட்சிகள் வெகு தீவிரமாக தங்கள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்து உள்ளனர். இதில் நேற்று மூன்று மாநில தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்தது.
காங்கிரஸ் சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 64 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்தது. இதில் பாஜக எம்பியாக இருக்கும் அம்மாநில தலைவர் அருண் சாவ் லார்னி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அடுத்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி அதன் பின்னர் பாஜக வசம் சென்ற மத்திய பிரதேசத்தில் 57 வேட்பாளர்களை நேற்று பாஜக தலைமை அறிவித்தது. ஏற்கனவே ஆகஸ்ட் 17 மற்றும் சுற்றும் செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை பாஜக அறிவித்த்த.
நேற்று அறிவிக்கப்பட்ட 57 வேட்பாளர்களின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர் ஏற்கனவே போட்டியிட்ட புத்னி தொகுதியில் போட்டியிட உள்ளார். அடுத்து காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் முதற்கட்டமாக 41 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அரசு தலைமை அறிவித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கும் நவம்பர் 7ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளின் ஒரே கட்டமாக நவம்பர் 14ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் 200 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஐந்து மாநில தேர்தல் வாக்குகளும் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.