ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை: 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

Author: Rajesh
30 January 2022, 9:44 am

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று இருவேறு இடங்களில் நடைபெற்ற என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் நேற்று இருவேறு இடங்களில் நடைபெற்ற என்கவுன்டரில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பட்காம் மற்றும் புல்வமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் இரு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அந்த பகுதிகளில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு இடங்களிலும் நடைபெற்ற என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ஷகித் வானி ஆவான்.

ஏனைய 4 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் இயங்கி வரும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 2693

    0

    0