திருப்பதி கோவிலில் 5 வயது சிறுவன் கடத்தல்….தம்பதியை திசை திருப்பி லாவகமாக கடத்தி சென்ற பெண் : ஷாக் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan2 May 2022, 10:45 am
ஆந்திரா : திருப்பதி மலையில் திருநாமம் போட்டு பிழைத்து வரும் தம்பதியினரிடம் 5 வயது மகனை பெண் ஒருவர் கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள தாமிநேடு பகுதியை சேர்ந்த வெங்கடரமணா மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் திருமலையில் பக்தர்களுக்கு திருநாமம் போட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
நேற்று மாலை 6 மணி அளவில் வெங்கட்ரமணா அவருடைய மனைவி மற்றும் அவகளுடைய ஐந்து வயது மகன் கோவர்தன் ஆகியோர் இருந்த இடத்திற்கு வந்த பெண் ஒருவர் அவர்களுடைய மகனை அங்கிருந்து கடத்தி சென்றுவிட்டார்.
நீண்ட நேரம் தேடியும் மகன் கிடைக்காத நிலையில் இது பற்றி வெங்கட்ரமணா திருமலை போலீசில் புகார் அளித்தார். திருப்பதி மலையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்தபோது பெண் ஒருவர் சிறுவன் கோவர்த்தனை கடத்தி பேருந்து மூலம் திருப்பதிக்கு அழைத்து சென்றது உறுதி செய்யப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த திருமலை போலீசார் சிறுவனை கடத்திய பெண் மற்றும் சிறுவன் கோவர்தன் ஆகிய 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிறுவனை கடத்திய பெண் பற்றிய தகவல் கிடைத்தால் திருமலை காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு, 9440796769 9440796772 ஆகிய எண்களில் தகவல் அளிக்க பொதுமக்களை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.