அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு… ஏழை பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் நிதியுதவி : காங்கிரஸ் வாக்குறுதி!
Author: Udayachandran RadhaKrishnan13 March 2024, 2:37 pm
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு… ஏழை பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் நிதியுதவி : காங்கிரஸ் வாக்குறுதி!
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெண்களுக்கு 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும்.
வறுமை கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும்.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பஞ்சாயத்துக்கு ஒரு பெண் பணியாளர் நியமனம் செய்யப்படும். * நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஒரு விடுதி கட்டப்படும்.
ஏற்கெனவே, மத்திய அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் வேலை வாய்ப்புகள் நிரப்பப்படும், அரசுப் பணிக்கான வினாத்தாள் கசிவதை தடுக்க சட்டம், தொழிற்பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு ரூ. ஒரு லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.
0
0