பாலக்காடு: கேரளாவில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆக்கிய நபருக்கு 50 ஆண்டு சிறை தண்டனையும் 7 லட்சம் அபராதமும் வழங்கி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
திருச்சூர் மாவட்டம் சாலக்கடிகுடி பகுதியில் வசிப்பவர் ஷிஜு. 43 வயதான இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பட்டாம்பி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது 16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியுள்ளார்.
இதனையடுத்து, ஷிஜு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் பட்டாம்பி போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, புகாரை பதிவு செய்த போலீசார் ஷிஜுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று பட்டாம்பி விரைவு போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
விசாரணையில் நீதிபதி சதீஷ் குமார் தனது தீர்ப்பில் சிறுமியை கற்பமாக்கிய ஷிஜுவிற்க்கு 50 ஆண்டு சிறை தண்டனையும், 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். தொடர்ந்து போலீசார் ஷிஜுவை பட்டாபி சிறைச்சாலையில் அடைத்தனர்.
சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியவருக்கு 50 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியின் தீர்ப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.