தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!
Author: kavin kumar25 January 2022, 4:40 pm
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 18 மற்றும் 20-ஆம் தேதிகளில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 56 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை வைத்த நிலையில், மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.