தொடங்கியது 5ஆம் கட்ட தேர்தல்.. 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு.. சிறையில் உள்ள CM மனைவி வெற்றி பெறுவாரா?
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
4 கட்ட தேர்தல்களில் மொத்தம் 66.95 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ : தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்!
உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மராட்டியம் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (7 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஒடிசா (5 தொகுதிகள்) ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), ஜம்மு-காஷ்மீர் (1 தொகுதி), லடாக் (1 தொகுதி) என மொத்தம் 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 5ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது.
147 தொகுதிகளை கொண்ட ஒடிசா சட்டசபைக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 28 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 35 தொகுதிகளுக்கு இன்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, வரும் 25ம் தேதி நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தலின்போது 42 சட்டசபை தொகுதிகளுக்கும், ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட தேர்தலின்போது 42 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கண்டே சட்டசபை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் சிறையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
This website uses cookies.