மூன்று மாநிலங்களை உலுக்கிய கொலை, கொள்ளை குற்றவாளிகள் 6 பேர் கைது : ஆந்திரா போலீசார் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2022, 8:06 pm

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏராளமான அளவில் வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி,கொள்ளை ஆகியவை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட ஆறு பேரை அனந்தபுரம் மாவட்டம் மடக்கசீரா போலீசார் கைது செய்தனர்.

அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷேக் எலியா (வயது 37), நாகேந்திரா (வயது 37), ஷேக் நிஜாம்(வயது 27), ஷேக் இம்ரான்(வயது 25), பாலாஜி (வயது 22), ராமஞ்சுநேயலு (43) ஆகிய 6 பேரும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற வழிப்பறி, வீடு புகுந்து திருடுவது, கொள்ளை ஆகியவை உள்ளிட்ட ஏராளமான வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவார்.

ஆறு பேரையும் இன்று காலை கைது செய்த மடக்கசீரா போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்கள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மூன்று ஆகியவை உள்ளிட்ட சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒவ்வொருவர் மீதும் 10 முதல் 32 வழக்குகள் வரை பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குற்றவாளிகள் அனைவரும் ஏற்கனவே சிறை சென்று வீடு திரும்பியவர்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!