குட்டை பாவாடையால் வந்த வினை : கொலையில் முடிந்த 6 மாத காதல் திருமணம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2024, 11:49 am

குட்டை பாவாடையால் வந்த வினை : கொலையில் முடிந்த 6 மாத காதல் திருமணம்..!!

பெங்களூரு மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா ராம்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஜீவன் (வயது 25). இவரது மனைவி ஜோதி (22). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

இவர்களுது திருமணம் காதல் திருமணம். இந்த நிலையில் திருமணத்திற்கு பின் மாடர்ன் உடைகளை ஜோதி அணிந்து வந்தார், இது அவரது கணவர் ஜீவனுக்கு பிடிக்கவில்லை.

இதனால் ஜோதியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து அரைகுறை ஆடைகளை அணிந்துள்ளார். இதையடுத்து பணிக்கு சென்ற ஜோதியை அழைத்து பைக்கில் கொண்டு விடுகிறேன் என கூறி ஜீவன், வனப்பகுதிக்குள் அழைத்து சென்றார்.

அங்கு ஜோதியை கடுமையாக தாக்கி பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் ஜோதியின் கழுத்தை அறுத்துள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே ஜோதி உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான ஜீவனை தேடி வருகின்றனர்.

  • producer lose his money because of suriya film எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?