திகார் சிறையில் ரவுடி அடித்துக் கொலை… 6 தமிழக போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் : டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு நெருக்கடி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2023, 2:31 pm

டெல்லி திகார் சிறையில் மிகவும் பாதுகாப்பு உள்ளதாகும். பாதுகாப்பு அதிகம் உள்ள இந்த சிறையில் கடந்த 2-ந்தேதி பிரபல ரவுடி சுனில்மான் என்கிற தில்லு தாஜ்பூரியா என்பவன் வெறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டான்.

ஜெயிலுக்குள் கொலையுண்ட தாஜ்பூரியா மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது. யோகேஷ் துண்டா மற்றும் அவரது கூட்டாளிகள் அவனை அடித்து கொன்றனர்.

திகார் சிறையில் பிரபல தாதா அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ரவுடி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது ஜெயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாஜ்பூரியா அடித்துக் கொல்லப்பட்ட போது குறைந்தது 10 போலீசார் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது அம்பலமாகி உள்ளது.
கொலையை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீசார் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

இது தொடர்பாக திகார் ஜெயில் நிர்வாகம் இதுவரை 30 உதவி கண்காணிப்பாளர் உள்பட 9 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்துள்ளது. தமிழக சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த 7 பேர் சஸ்பெண்டு ஆனார்கள்.

அவர்கள் தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான ஒரு அறிக்கையை திகார் ஜெயில் நிர்வாகம் டெல்லி துணை நிலை கமிஷனருக்கு சமர்ப்பித்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 433

    0

    0