யாசகம் எடுத்த அசதியில் படுத்து தூங்கிய 60 வயது மூதாட்டி ; பாலியல் பலாத்காரம் செய்த போதை ஆசாமி… அதிர வைக்கும் சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
20 February 2023, 4:22 pm

யாசகம் எடுத்த அசதியில் படுத்து தூங்கிய 60 வயது மூதாட்டியை மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் 60 வயது மூதாட்டி ஒருவர் யாசகம் எடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். தங்குவதற்கு வீடு எதுவும் இல்லாத நிலையில், கிடைக்கும் இடங்களில் படுத்து கொள்வார். அந்த வகையில், ஸ்ரீபாஷ் அங்கன் காட் சாலையில் இருக்கும் இடத்தில் யாசகம் வாங்கிய அவர், அசதியில் அங்கேயே தூங்கியுள்ளார்.

இந்த நிலையில், திடீரென நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் மூதாட்டியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் அவரது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர், இது தொடர்பாக அதிகாலையில் அந்த மூதாட்டி அப்பகுதி மக்களிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ந்து போன அவர்கள், மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிய நபர் குறித்த விவரம் தெரிய வந்தது. இதையடுத்து, ராகுல் ராய் என்ற அந்நபரை நபத்வீப் தம் பகுதியில் வைத்து போலீசார் கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின், போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 452

    0

    0