64 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.. பெண் வாக்காளர்களுக்கு சல்யூட் : பறந்த மீம்ஸ்.. தேர்தல் ஆணையர் விளக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2024, 2:26 pm

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடவடிக்கைகள் பற்றி தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தற்போது செய்தியாளர்ளை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அபபோது அவர் கூறுகையில், 2024 பொதுத்தேர்தலில் AI மூலம் ஏற்படும் ஆபத்தை நாங்கள் கவனித்து வருகிறோம். அதனை கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என ராஜீவ் குமார் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், இந்த தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்திற்கு வந்த 495 முக்கிய புகார்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான புகார்ககளுக்கு நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.

இந்த தேர்தலில் பண பட்டுவாடா, மதுபான விநியோகம், இயந்திரங்கள் முறைகேடு ஆகிய எதுவும் செய்யப்படவில்லை. தேர்தலை, தேர்தல் பிரச்சாரத்தை உன்னிப்பாக கவனித்தோம். பேரணியில் பேனர்கள் எதுவும் இல்லை. எந்த வித இடையூறும் மக்களுக்கு ஏற்படவில்லை. மிகவும் அமைதியாக தேர்தல் நடைபெற்றது. முன்னதாக, அனைத்து வளர்ச்சிப் பணிகளும் தேர்தல் சமயத்திலல் நிறுத்தப்படும். இருப்பினும், இந்த முறை, அதனை கட்டுப்படுத்தி மக்கள் நலன் திட்டங்கள் தொடர செய்தோம்.

642 மில்லியன் (64.2 கோடி) இந்திய வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர் என்ற உலக சாதனை படைத்துள்ளோம். நம் அனைவருக்கும் இது ஒரு வரலாற்று தருணம். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா.. என அனைத்து G7 நாடுகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை விட 1.5 மடங்கு அதிகம். இது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் உள்ள வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகம். இதுதான் இந்திய வாக்காளர்களின் அசாத்திய சக்தி.

மேலும் படிக்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து.. இளம்பெண்ணை சீரழித்த சினிமா தயாரிப்பாளர் : அம்பத்தூரில் அதிர்ச்சி!

312 (31.2 கோடி) மில்லியன் பெருமைமிக்க பெண் வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர். இதுவும் உலகிலேயே மிக அதிகமாகும்.

கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் எண்ணிக்கைகள் பெரியது. வாக்களித்த அனைத்து பெண் வாக்காளர்களையும் நாம் போற்ற வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.

  • Devayani wins award for short film இயக்குனரான நடிகை தேவயானி : விருது வாங்கி அசத்தல்…குவியும் வாழ்த்துக்கள்..!