இமாச்சல பிரதேசத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியான 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் அறிவிப்பு…பிரதமர் மோடி இரங்கல்..!!

Author: Rajesh
22 February 2022, 5:57 pm

புதுடெல்லி: இமாசல பிரதேசத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இமாசல பிரதேசம் உனா பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஒன்றில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் பலியாகினர். 12 பேர் தீக்காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் பலியனவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் எனப் பதிவிட்டுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1631

    0

    0