காரில் இடித்த விவகாரத்தில் 71 வயது முதியவரை பைக்கில் தரதரவென இழுத்துச் சென்ற இளைஞரால் பெங்களூரூவில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் நடமாட்டம் உள்ள கர்நாடகா – பெங்களூரு நகரில் மகாதி ரோட்டில் இருக்கும் டோல் கேட்டில் இருந்து ஹாசஹல்லி மெட்ரோ ஸ்டேஷன் வரையிலும், சுமார் ஒரு கிலோ தொலைவுக்கு ஸ்கூட்டரில் சென்ற வாலிபர், முதியவர் ஒருவரை தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ந்து போன அப்பகுதி வாகன ஓட்டிகள், உடனே அந்த ஸ்கூட்டரை மடக்கி பிடித்து, முதியவரை மீட்டனர். பின்னர், அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் எதற்காக..? ஏன்..? நிகழ்ந்தது என்பது குறித்து போலீசார் கூறியதாவது :-
ஸ்கூட்டர் ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த சாஹில் (25), 71 வயதான முத்தப்பா என்பவர் ஓட்டி வந்த காரை இடித்து சேதப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, சாஹில் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.
அப்போது, முத்தப்பா அந்த ஸ்கூட்டரின் பின் கம்பியை பிடித்த நிலையில், ஸ்கூட்டரை நிறுத்தாமல் ஓட்டிய சாஹில், முதியவரை தரதரவென 800 மீட்டருக்கு மேல் இழுத்துச்சென்று அட்டூழியம் செய்துள்ளார்.
அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை குறுக்கே நிறுத்தி சாஹிலை பிடித்து, முத்தப்பாவை மீட்டுள்ளனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், என தெரிவித்தனர்.
முதியவர் என்றும் பாராமல், தரதரவென அவரை இழுத்துச்சென்ற வாலிபரின் செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனங்களை எழச் செய்துள்ளது.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.