காந்திஜியின் 75வது நினைவு தினம் : காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் , பிரதமர் மோடி மரியாதை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2022, 12:28 pm

டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர்.

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் பிரபலங்கள் பலரும் காந்தியின் நினைவை போற்றி, சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி அவர்களும், மகாத்மா காந்தியின் உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும். தியாகிகள் தினமான இன்று நமது தேசத்தை துணிச்சலுடன் பாதுகாத்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் சேவையும் துணிச்சலும் என்றும் நினைவு கூறப்படும் என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 2642

    0

    0