பொட்டலம் பிரியாணி… ஆளுக்கொரு பீர் பாட்டில்… புத்தாண்டு கொண்டாடிய ஏழாம் வகுப்பு மாணவர்கள் : அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
3 January 2024, 2:46 pm

மது அருந்தி பிரியாணி சாப்பிட்டு ஏழாம் வகுப்பு மாணவர்கள் புத்தாண்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சோடவரம் நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்கள் அரசு விடுதியில் தங்கி உள்ளனர்.

கடந்த 31ஆம் தேதி இரவு ரகசியமாக விடுதியில் இருந்து வெளியேறிய ஏழாம் வகுப்பு மாணவர்கள் 16 பேர் அதே ஊரை சேர்ந்த மேலும் இரண்டு பேருடன் சேர்ந்து, கட்டுமானத்தில் இருக்கும் வீடு ஒன்றில் கூடி, பீர் வாங்கி வந்து குடித்து, பிரியாணி சாப்பிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழாம் வகுப்பு மாணவர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை வேறு ஒரு நபர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். இதனை கவனித்த மாணவர்கள் அவரை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயம்பட்ட நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது டாக்டர்கள் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.

ஏழாம் வகுப்பு மாணவர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றன. இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 468

    0

    0