8 மாத குழந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு… நெஞ்சை உலுக்கிய சோக சம்பவம்!!!
Author: Udayachandran RadhaKrishnan19 June 2023, 11:28 am
கேரளா மாநிலம் கோட்டயம் மணற்காடு பத்தழகுழியைச் சேர்ந்தவர் எபி இவரது மனைவி ஜோன்சி. எபி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினரின் மகன் எட்டு மாதக் குழந்தை ஜோஷ், காய்ச்சல் காரணமாக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துமனையின் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குழந்தைக்கு பிந்தைய கொரோனா பாதிப்பு நோய் இருக்கலாம் என்ற முடிவின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மே 29 அன்று இரவு 9 மணியளவில் குழந்தைக்கு இன்பிளிக்சிமாப் என்ற ஊசி போடப்பட்டது.
இந்த மருந்தை செலுத்தினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிந்திருந்தும் குழந்தையின் உடலில் கண்காணிப்பு அமைப்பு எதுவும் ஏற்படுத்தாமல் என குடும்பத்தினர் கூறுகின்றனர்.
திடீர் என குழந்தை அசாதாரணமாக மூச்சு விடுவதைப் பார்த்து அறையில் இருந்த குழந்தையின் தாயின் பெற்றோர் சத்தம் எழுப்பி உள்ளனர். அதன்பின் தான் பணியில் இருந்த பயிற்சி டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் வந்து சிகிச்சை அளித்து உள்ளனர்.
இருந்தும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை குழந்தை மாரடைப்பால் உயிரிழந்தது. இதனால் குழந்தைகள் நல மருத்துவமனை மீது குழந்தையின் குடும்பத்தினர் சுகாதார அமைச்சரிடம் புகார் அளித்துள்ளனர்.
குழந்தைக்கு அதிக அளவு மருந்தை கொடுத்த பிறகு குழந்தையின் உடல்நிலை சரியாக கண்காணிக்கப்படாததால் மாரடைப்பு ஏற்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
குழந்தைக்கு கடுமையான இதய நோய் இருந்ததாகவும், மருத்துவமனையில் எந்த மருத்துவக் கோளாறும் இல்லை என்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறி உள்ளார். அதிகாரபூர்வ புகார் இருந்தால் விரிவான பதில் அளிப்பதாகவும் கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.
0
0