இலங்கையில் வாழ வழியின்றி மேலும் 8 பேர் தமிழகம் வருகை : மூன்று குழந்தைகளுடன் வந்த தமிழர்களிடம் மரைன் போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2022, 10:00 am

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி வாழ வழியின்றி மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் தஞ்சம், மரைன் போலீசார் விசாரணை

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இலங்கையில் இருந்து 142 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர்கள் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கம்பிபாடு பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளதாக கடலோர காவல் குழுமம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர். நேற்று 8 பேர் வந்த நிலையில் மேலும் 8 பேர் இன்று தமிழகத்திற்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…