9 ஆம் தேதி மாலை 6 மணி… மோடியின் சாதனை : 3வது முறையாக மீண்டும் பிரதமர் ஆகிறார்!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2024, 5:09 pm
Mod
Quick Share

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இதில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி அதிக இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியது.

தனிபெரும்பான்மையுடன் 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஆட்சி செய்த பாஜக தற்போது, தெலுங்குதேசம் , ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்க உள்ளது.

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்வானது நாளை மறுநாள் (ஜூன் 8) தேதி நடைபெறும் என முன்னர் கூறப்பட்டு வந்தது.

இதனை அடுத்து தற்போது வெளியான தகவலின் படி ஜூன் 9ஆம் தேதி வரும் ஞாற்றுக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகும் நிகழ்வு நடைபெறும் செய்தி வெளியாகியுள்ளது.

Views: - 123

0

0