தேர்வறையில் சுருண்டு விழுந்த 9ஆம் வகுப்பு மாணவி.. திடீர் மாரடைப்பு : சடலமாக மீட்ட சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2023, 6:45 pm

தேர்வறையில் சுருண்டு விழுந்த 9ஆம் வகுப்பு மாணவி.. திடீர் மாரடைப்பு : சடலமாக மீட்ட சோகம்!!

குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில், 15 வயதான 9-ம் வகுப்பு மாணவி, தேர்வறைக்குள் நுழைந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

சாக்ஷி ரஜோசரா என்ற மாணவி, ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர். அவர் தேர்வு அறைக்குள் நுழையும் போது மயங்கி விழுந்தார். நினைவிழந்த நிலையில், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழப்புக்கு காரணம் அறிய, அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் நுழையும்போது மாணவிக்கு மாரடைப்பு நேரிட்டதால், பள்ளி செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்கள் தந்த அழுத்தங்கள் எதுவும் அவரது உடல்நலத்தை பாதிக்கும் வகையில் இருந்ததா என்பது குறித்தும் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக குஜராத் மாநிலத்தில் இளம் வயதினர் மாரடைப்பால் மரணமடைந்து வருவது அதிகரித்திருக்கிறது. கடந்த மாதம் நவராத்திரியின்போது 20க்கும் மேற்பட்டோர் கர்பா நடனத்தின்போது மாரடைப்பால் மரணமடைந்ததாக புள்ளிவிவரங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், 9-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணமடைந்திருப்பது குஜராத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 593

    0

    0