58 வயது பெண்ணை சீரழித்த 16 வயது சிறுவன் : கொலை செய்து சடலத்துடன் உல்லாசம்… அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2023, 4:26 pm

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டம் கைலாசபுரி என்ற கிராமத்தில் 58 வயது பெண் ஒருவர் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போது 16 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இந்த பெண்ணின் வீட்டுக்கு, டிவி பார்க்க இந்த சிறுவன் சென்றுள்ளான்.

அப்போது அந்த பெண்ணின் மொபைல் போன் திருட்டு போயிருந்தது. உடனே சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தன்னை அவமானப்படுத்திய குடும்பத்தினரை பழி வாங்க முடிவெடுத்த சிறுவன், தனிமையில் இருந்து பக்கத்து வீட்டு பெண்ணை தாக்கி , அருகில் இருந்த கட்டுமானப் பணி நடந்த கட்டிடத்தில் இழுத்து சென்றான்.
அந்த பெண் சத்தம் போட முடியாத அளவில் வாயில் துணியை வைத்து திணித்துள்ளான், மேலும் பெண்ணின் முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி, கடுமையாக தாக்கியுள்ளான்.

இதில் அந்த பெண் மயக்கமடையவே, அந்த பெண்ணை பலாத்காரம் செய்து அந்தரங்க உறுப்புகள் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளான். அந்த பெண் இறந்து விடவே, ஆத்திரம் தீராத சிறுவன், சடலமாகியும் உறவு வைத்துள்ளான்.

இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்து விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளான், தற்போது சிறார் சீர்திருத்த பள்ளியில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!