போதையில் அதிவேகமாக காரை ஓட்டி 2 பேரை கொன்ற 17 வயது சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன்.. விமர்சிக்கப்படும் நீதி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2024, 2:34 pm

போதையில் அதிவேகமாக காரை ஓட்டி 2 பேரை கொன்ற 17 வயது சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன்.. விமர்சிக்கப்படும் நீதி!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கல்யாணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போர்ச் கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அஸ்வினி கோஸ்டா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அனிஸ் துதியா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த காரை 17 வயது சிறுவன் ஓட்டி வந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் என தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க: தமிழர்களை திருடர்கள் என சொல்வதா? வாக்குக்காக தமிழர்கள் மீது அவதூறு பரப்பாதீங்க : பிரதமர் மோடிக்கு CM ஸ்டாலின் கண்டனம்!

அவரை விபத்து நிகழ்ந்த இடத்தில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். அந்த சிறுவன் மதுபோதையில் இருந்ததும், பார்ட்டி முடித்து வீடு திரும்பிய போது காரை வேகமாக இயக்கியுள்ளார் என்பதும், ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது.

சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம். .

நிபந்தனையில் கூறப்பட்டுள்ளதாவது, போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும், எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வயது குறைந்த மகனை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. 17 வயது சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

அந்தச் சிறுவனுகு சமூக சேவை, போதை விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 357

    0

    0