5 வயது சிறுமி… நெஞ்சை பதற வைத்த கொடூர சம்பவம் : குலுங்கிப் போன கேரளா!!
Author: Udayachandran RadhaKrishnan30 July 2023, 1:56 pm
கேரள மாநிலத்தில் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கேரளாவின் கொச்சி அருகே உள்ள அலுவா நகரில் தங்கியிருந்து பணியாற்றி வந்த பீகார் தம்பதியரின் 5 வயது குழந்தை வெள்ளிக்கிழமை மாலையில் காணாமல் போனது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். மறுநாள் அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு பின்புறம் சிறுமியின் சடலம் கண்டறியப்பட்டது.
சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்தது.